(நா.தனுஜா)

பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் தமது சொத்து விபரங்களை இன்றைய தினம் பகிரங்கமாக வெளியிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் சொத்து விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு கடந்த காலங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தது. 

இந் நிலையிலேயே தற்போதை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தமது சொத்து விபரங்களை நிப்பொன் ஹோட்டலில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது பகிரங்கமாக வெளியிட்டனர்.