போதைப்பொருளை அழிப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் போராட்டத்துக்கு சவூதி  அரசாங்கம் ஆதரவளிக்கும் என கிழக்கு ஆசிய  நாடுகளுக்குரிய முஸ்லிம் உலக லீக்கின் ஆலோசகர் கலாநிதி அஹமட் ஹமாத் ஜிலான் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு  சவுதி அரேபியாவிலிருந்து இங்கு வருகைதந்திருந்த இவர், அண்மையில் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலியை மாகாண அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது அவர்,அனைத்து சமூகத்தினருடனும் சமாதான சுகவாழ்வு ஏற்படுவது அவசியமானது என்பதை சுட்டிக்காட்டிய அவர்,இலங்கை அரசாங்கம் போதைப்பொருளை ஒழிப்பதற்கு மேற்கொள்ளும் போராட்டத்துக்கு முஸ்லிம் உலக லீக் (MWL) ஆதரவளித்து, இலங்கையில் கல்வியை ஊக்குவிப்பதாக உறுதியளித்தார்.

சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் மற்ற அனைத்து மதங்களையும் மதிப்பதன்  மூலம் மிதமான பாதையை பின்பற்றி வருகிறார். இஸ்லாம் சகல இனங்களுக்கிடையே சகிப்புத்தன்மையையும் சமரசத்தையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நம்புகிறது என்றும் அவர் கூறினார்.

இதன்போது மேல்மாகாண ஆளுநர் நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.