முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு பிற்போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவை அடுத்த மாதம் 7 ஆம் திகதிவரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.