தனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள அதிசய தாய்.

அமெரிக்காவைச் சேர்ந்த கிம் வெஸ்ட் என்ற பெண்மணி 30 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு பிறந்த பென் போர்ட் என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துள்ளார்.

தற்போது, 32 வயதாகும் போர்ட், விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிம் தனது மகனை சந்தித்தவுடன், அவன் மீது ஒரு இனம்புரியாத அன்பு வந்துள்ளது.

இதே அன்பு, போர்ட்க்கும் வந்ததாம் இதனால் அவர்கள் இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, போர்ட் தனது மனைவியிடம் இது குறித்து கூறியுள்ளார்.

பின்னர், போர்ட் கெம்சிகன் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார். அங்கு தனது தாயாரை அவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர்.

இது குறித்து கிம் கூறுகையில், "இந்த விஷயத்தை கேள்விப்படும் அனைவரும் இதனை, அருவருப்பாகவும், வியக்கத்தக்க சம்பவமாக பார்ப்பார்கள்.

ஆனால், இது முறையற்ற உறவு கிடையாது, மரபணு சார்ந்த இனக்கவர்ச்சி" எனக்கூறி விளக்கமளித்துள்ளார்.

மேலும், வாழ்க்கையில் கிடைக்கும் இதுபோன்ற ஒருவித வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே போர்ட்டை பிரிந்து ஒருபோதும் செல்லமாட்டேன் எனக்கூறியுள்ளார்.

தாயும் மகனும் திருமணம் செய்துகொள்ளும் முறையற்ற உறவு முறைகளுக்கு எந்த விதமான காரணங்களைக் கூறினாலும், அது ஏற்புடையது அல்ல என்றும் இது கலாச்சார சீரழிவு என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.