சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு ஒரு தொகை இலங்கை நாணயத்தாள்களை கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சிங்கப்பூருக்கு செல்ல முற்பட்டபோதே குறித்த நபரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, நபரின் பயணப் பொதியை சோதனையிட்டபோது, சுங்க அதிகாரிகள் ஒரு தொகை இலங்கை நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதுடன் குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை - தம்பலாகம் பிரதேசத்தை சேர்ந்த சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பயணியாற்றிய 46 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரின் பயணப்பொதியிலிருந்து சுமார் 48 இலட்சத்து 99 ஆயிரம் ரூபா பெறுமதியான 1000 ருபா நாணயத்தாள்கள் மற்றும் 5000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபரை கைதுசெய்துள்ள சுங்க அதிகாரிகள் அவரிடமிருந்த நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM