பண்பு, அறிவு, வலு நிறைந்த பிள்ளைகள் சமூகம் ஒன்றை நாட்டுக்கு உருவாக்கும் நோக்கில் ''அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" செயற்றிடத்தின் கீழ் நாடுபூராகவும் 200 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட முழுமையான  200 திட்டங்களை ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நாடு தழுவிய தேசிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வு அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் அழைப்பின்பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குளியாப்பிட்டியவில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி  இடம்பெறவுள்ளது.

இதன்போது குளியாபிட்டிய சென். ஜோசப் வித்தியாலய புதிய மூன்று மாடிக் கட்டம், குளியாபிட்யடி சாரனாத் வித்தியாலயத்தில் சகல வதிகள் கொண்ட கேட்போர் கூடம், குளியாபிட்டிய ஆசிரிய பயிற்சி நிலயைத்தின் புதிய நிர்வாகக் கட்டம் என்பன கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.