பொன் ராம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

வருத்தப்படாத வாலிபர் சங்கம். ரஜினிமுருகன்.  சீம ராஜா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பொன் ராம் அடுத்ததாக இயக்கவிருக்கும் பெயரிடாத படத்தில் சசிகுமாரும்,  இராஜ்கிரணும் இணைந்து நடிக்கிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வரிசையான மூன்று படங்களை இயக்கி, அவருக்கு கொமர்ஷல் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர் இயக்குனர் பொன் ராம். அதே பாணியில் தற்பொழுது சசிகுமாருக்கும் ஒரு கொமர்ஷல் ஹிட் கொடுக்க தீர்மானித்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம். இதற்காக அவர் உருவாக்கியுள்ள திரைக்கதையில் ராஜ்கிரணை இணைத்துக் கொண்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் இன்றும் கிராமப் பகுதிகளில் தனி இரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

குறித்த படத்தின் திரைக்கதை மற்றும் பட்ஜட் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தினைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். 

இதனிடையே நடிகர் சசிகுமார், நடிப்பில் நாடோடிகள் 2, கென்னடி கிளப், கொம்பு வச்ச சிங்கம்டா, ஆகிய படங்கள் தயாராகி இருக்கிறது என்பதும், தற்போது அவர் சுந்தர் சியின் உதவியாளர் கதிர்வேலு என்பவரின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.