இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்திய விமானப்படை அதிகாரியை கைது செய்துள்ளோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. 

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவீஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் இந்தியாவில் மேலும் தாக்குதலை நடத்தலாம் என நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றது.

இந்தியா இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தீவிரவாதத்தை அழிக்கும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்திய வான்பகுதிக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானப்படையின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. மறுபுறம் துரதிஷ்டவசமாக இந்தியா மிக் 21 விமானம் ஒன்றை இழந்துள்ளது. அதில் சென்ற விமானி எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாவது,

இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது.  இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை கைது செய்துள்ளோம். அவருடைய சர்வீஸ் எண் 27981. அவர் இப்போது பாகிஸ்தான் இராணுவத்திடம் உள்ளார் எனவும் தெரிவித்தது. இதனையடுத்து இந்தியாவின் மிக்-21 விமானத்தில் சென்ற கமாண்டர் அபினந்தன் திரும்பவில்லை என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.