பண்டிகை காலத்தில் மக்களுக்கு முறையற்ற விதத்திலும் சுகாதாரத்திற்கு கேடானதுமான உணவு பொருட்கள் உட்பட ஏனைய பண்டங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் பொருள் கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோர் பொருட்களின் தரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவித்துள்ளது. 

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் தருணத்தில் அவற்றுக்கான  பாதுகாப்பு உட்பட அவற்றின் தரத்தினை உறுதிப்படுத்துவது தொடர்பில் சுகாதாரக அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவிய போதே கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி விஜிதமுனி சொய்சா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.