கிரிக்கெட்டை ஆழமாக நேசிப்பதன் காரணமாக ஐசிசியின் இரண்டுவருட தடையை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய தான் ஊழல்நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சனத்ஜெயசூரிய ஊழல்தடுப்பு விசாரணை பிரிவினரிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டி ஐசிசி அவரிற்கு இரண்டு வருட தடை விதித்துள்ள நிலையிலேயே சனத்ஜெயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மீதான ஆழமான காதல் காரணமாகவும் அதன் பாரிய நன்மைக்காகவும் கிரிக்கெட்டின் நேர்மை தன்மையை பாதுகாப்பதற்காகவும் நான் ஐசிசியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு வழங்க மறுத்தேன் என்ற அடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் சிம்கார்ட்டையும் ஐபோனையும் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும் சனத்ஜெயசூரிய குறிப்பி;ட்டுள்ளார்.
என்மீது ஊழல் குற்றச்சாட்டுகளோ ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகளோ இல்லை அதேபோன்று நான் முக்கிய தகவல்களை வெளியாரிற்கு வழங்கியதாக குற்றச்சாட்டுகளும் இல்லை என சனத்ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களிற்காகவே நான் கையடக்கதொலைபேசியையும் சிம்கார்ட்டையும் உடனடியாக ஐசிசி அதிகாரிகளிடம் வழங்கமறுத்தேன் என குறிப்பிட்டுள்ள சனத்ஜெயசூரிய எனினும் பின்னர் தான் அவற்றை ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
என்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகள் இல்லாதபோதிலும் ஐசிசி தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது துரதிஸ்டவசமானது எனவும் சனத்ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM