இந்தியா நேற்று  பயங்கரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது இதில் பயங்கரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் பயங்கரவாத தளபதிகள் உள்ளிட்ட சுமார்  300க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் இன்று குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதலில் இந்திய இராணுவம் வீரர்கள் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி இத்தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.

அதேநேரம், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பயங்கரவாதிகள் மீது இந்தியா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் பயங்கரவாத தளபதிகள் உள்ளிட்ட சுமார்  300க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.