2016ஆம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது ட்ரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த குற்றச்சாட்டுகளால் ட்ரம்புக்கு பெண்களின் ஆதரவு வெகுவாக குறைந்தது. எனினும் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதன் பின்னரும் சில முறை ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது ட்ரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது ட்ரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் ட்ரம்ப் மீது புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறித்த பெண் தன்னுடைய மனுவில், “2016ஆம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள டம்பா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த ட்ரம்ப், என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். பெண்களுக்கு எதிரான ட்ரம்பின் அத்துமீறல் நடவடிக்கையில் நானும் பாதிக்கப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM