(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்குத் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றினால் இடைக்கால தடை உத்தரவொன்று அமுலில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றின் உத்தரவொன்று கிடைக்கும் வரை இவ்வாறு குறித்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.