(எம்.ஆர்.எம்.வஸீம்)

பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இதனை நாங்கள் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பயங்கரவாதம் தொடர்பில் இந்த சட்ட மூலத்தில் பல அத்தியாயங்களில் அர்த்தம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்கங்களுக்கு கூட வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.