(ஆர்.விதுஷா)

மீரிகமை - லோலுவாகொட பகுதியில் இளைஞரொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக மீரிகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மீரிகமை - திவுலபிட்டிய வீதியில் இளைஞரொருவரின் சடலம்    காணப்படுவதாக இன்று அதிகாலை பொலிசாருக்கு   கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய  உயிரிழந்தவர் 27 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேர பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.