இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் யாழ் ஊடக அமையமும் இணைந்து நடத்திய  ''தமிழ் ஊடகத்துறை எதிர்காலமும் சவால்களும் ''  முழுநாள் செயலமர்வு கடந்த 24 ஆம் திகதியன்று  யாழ் யூ.எஸ் விடுதியில் ஒன்றியத்தின் தலைவர் ஆனந் பாலகிட்னண்  தலைமையில் இடம்பெற்றது. 

இச் செயலமர்வில்  கிழக்கு மாகாண ஊடகங்களின் நிலை குறித்து  அரங்கம் பத்திரிக்கை ஆசிரியர்  பூ. சீவகனும் ,ஊடகங்களின்  செய்திகளின் தொடரற்ற நிலை குறித்தது  காலைக்  கதிர் ஆசிரியர்  ந.வித்தியாதரனும் , ஊடகங்களில் தமிழ் இலக்கணம் குறித்து  விரிவுரையாளர் எஸ் .இந்திரகுமாரும் விளக்கவுரை நிகழ்த்தினார்கள் . 

மேலும் தமிழ் ஊடகத்துறையின் எதிர்காலமும்  சவால்களும் குறித்து  பத்திரிகையாளர்  அ .நிக்சன் ,  விரிவுரையாளர், கலாநிதி  எஸ் .ரகுராம், எம்.நிலாந்தன், பத்திரிகையாசிரியர் .ஆர்.பாரதி , ஊடகவியலாளர்.  இ .தயாபரன். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ராதேயன், மாணிக்கவாசகம், ஆகியோர் கருத்துக் பகிர்வுகளை மேற்கொண்டனர் . 

யாழ் பல்கலைக் கழக  ஊடக துறை மாணவர்கள், , ஊடகவியலாளர்கள்,  மூத்த ஊடகவியலாளர்கள், யாழ் .கொக்குவில், ஊடக ஆய்வு நிறுவனம் ,  உட்பட பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது