(எம்.மனோசித்ரா)

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பில் எமக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார். 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது இதேபோன்று தான் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவின் விசாரணை அறிக்கைகளின் பின்னர் அவ்வாறானதொரு ஊழல் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையும் இது போன்றே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.