(எம்.மனோசித்ரா)

தேயிலையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் காணப்படுகின்ற நாடுகளிலும் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்ற ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்களுக்கு மாத்திரமே கூடியளவிலான சலுகைகள் வழங்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். 

அத்துடன் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டங்களில் காணப்படும் காணிகளை விவசாயத்தினை மேற்கொள்வதற்காக தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. 

அவ்வாறு காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கும் அதேவேளை அவர்கள் பணியாளர்களாக அல்லாமல் பங்குதாரர்களாகக் காணப்படுவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.