மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹொரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரல்ல பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொரல்ல - பேஸ்லையின் வீதியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் 39 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.

மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.