சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.