சிரியாவில் ஐ.எஸ்.  பயங்கரவாத அமைப்பினர் பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேரை கொலை செய்துள்ளதாகவும் அவர்களின் தலைகள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரித்தானியாவின் விசேட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே பெண்களைக் கடத்திச் சென்று அவர்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய பின்னர் குறித்த பெண்களை கொன்று தலைகளை குப்பைத்தொட்டியில் வீசியிருப்பதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது. 

தோற்கும் தருணத்தில் குறித்த அப்பாவிப் பெண்களை கோழைத்தனமாகக் கொன்று கொரடூரமாக அவர்களின் தலைகளை ஐ.எஸ். அமைப்பினர் வீசிச்சென்றுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.ஏ.எஸ் இராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீடு கடும் தாக்குதல் தொடுத்தபோது அவர்கள் நகரத்தின் அடியில் தோண்டி வைத்த குகைகளுக்குள் சென்று பதுங்கியிருப்பதோடு சாதாரண மக்களோடு மக்களாக ஒளிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.