நீரிழிவு நோயுடன் எவ்வாறு வாழக்கற்றுக் கொள்வது?

Published By: Robert

10 Apr, 2016 | 10:25 AM
image

நீரிழிவு நோய் தொடர்பில் இன்னும் எமது சமூகம் விழிப்படைய வேண்டும். இதன் தாக்கம் குறித்து அறிந்திருந்தும் பெரிதும் அக்கறை கொள்ளாதிருப்பது மிஞ்சியிருக்கும் ஒரு சில வருடங்களையும் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. இதனடிப்படையில், சுகாதார கல்வி பணியகத்தினால் கடந்த 05 ஆம் திகதி கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோயிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறலாம் என்பது தொடர்பில் பல்வேறு முக்கியமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நீரிழிவு நோயானது முதன்மையான நான்கு தொற்றா நோய்களில் ஒன்றாகும். இதனால் கண்பார்வை இழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறு ஆகிய முக்கிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக உள்ளது. நீரழிவு நோயை முன்னறிந்து தடுக்க முடியும் அல்லது அதற்கேற்ற சிகிச்சை மூலம் நீரிழிவு நோயுடன் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் முடியும். இதனிடையே நீரிழிவு நோய் மரணத்திற்கான அறிவிப்பா என்றால், அவ்வாறான தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

நீரிழிவு என்பது பாரிய விடயமல்ல. நீரிழிவு நோயை சரியான முறையில் பரிசோதிக்காவிட்டால் சிக்கல் ஏற்படும். சாதாரண நிலையிலுள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தை காட்டிலும் நீரிழிவு நோய் தாக்கமுள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பம் இரட்டிப்பாகும். மேலும் சிறுநீரக செயற்பாடு பாதிக்கப்படுவதற்கும், குறைவான கால் மூட்டு வாதம் மற்றும் பல நீண்ட கால பாதிப்புக்களையும் நீரிழிவு ஏற்படுத்திவிடும். இந்நோயின் தாக்கமுள்ளவர்கள் விசேட உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்றவேண்டும். தானியங்கள், மரக்கறி வகைகள், பழங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதுடன் உடற்பருமனை கட்டுப்படுத்தக்கூடிய கொழுப்பு மற்றும் காபோஹைட்ரேட் கொண்ட உணவு வகைகளை தவிர்ப்பதும் அவசியமாகும். குறிப்பாக சீனியற்ற உணவு பொருத்தமானதாகும்.

நீரிழிவு நோயால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில் முறையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளல் அவசியமாகும். மருந்து வகைகள் நீரிழிவு நோயிற்கான தாக்கத்தை கட்டுப்படுத்தும். சிகிச்சையை தாமதப்படுத்தும் போது அதன் தாக்கம் ஏனைய உடல் உறுப்புகளையும் பாதிப்படையச் செய்துவிடும்.

2014ஆம் ஆண்டில் வளர்ந்தோரில் 422மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததோடு இத்தொகை 1980ஆம் ஆண்டில் காணப்பட்ட 108மில்லியனிலும் பார்க்க 4மடங்கினால் அதிகரித்துள்ளது. சுமார் 80 வீதத்தினோர் குறைந்த மற்றும் மத்திய தர வருமானத்தை கொண்ட நாடுகளை சேர்ந்தவர்களாவர். 2014ஆம் ஆண்டில் வளர்ந்தோர் மத்தியில் 8.5வீதமானோருக்கு நீரிழிவு நோய் காணப்பட்டுள்ளது

2012ஆம் ஆண்டு முதல் இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பின் காரணமாக உலகலாவிய ரீதியில் 3.7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 1.5 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயின் நேரடி தாக்கத்தின் காரணமாக உயிரிழந்தனர். அதே ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உயிரிழப்பிற்கு காரணமான முக்கிய விடயங்களில் நீரிழிவு நோய் எட்டாவது இடம் வகித்ததுடன் பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களில் ஐந்தாவது இடத்தை நீரிழிவு நோய் வகித்துள்ளது.

குறிப்பாக, நீரிழிவு நோயுடனிருக்கும் அரைவாசிக்கு மேற்பட்டோர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றே கூறவேண்டும். தென்கிழக்காசிய பிராந்தியத்தில் நீழிழிவு நோயின் தாக்கத்திற்குள்ளானோரின் எண்ணிக்கை 1980ஆம் ஆண்டு 4.1வீதத்திலிருந்து 2014 ஆம் ஆண்டு 8.6 வீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் 70வயதிற்கு முன்னர் 60வீதத்திற்கு மேற்பட்ட ஆண்களும் 40வீதத்திற்கு உட்பட்ட பெண்களும் நீரிழிவு நோய் காரணமாக இறக்கின்றனர்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யமுடியாது

நீரிழிவு நோயுடன் உள்ள தனிப்பட்ட நபர் ஒருவர் அவரது நீரிழிவு நோயை சரியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் இரத்ததானம் செய்ய முடியும். (வைத்தியர்களின் ஆலோசனை அடிப்படையில்)

நீரிழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பமடைய கூடாது

நீரிழிவு நோயை சரியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பெண்ணால் கர்ப்பமடைய முடிவதுடன் ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ளவும் முடியும் கர்ப்பகால நீரிழிவு நோயை பாரதூரமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை அது மகப்பேற்றுக்கு பின் மறைந்துவிடும்

கர்ப்பகால நீரிழிவுநோயை கொண்டுள்ள 50முதல் 70 வீதமான பெண்களுக்கு நீரிழிவு நோயின் 2ஆவது வகை தாக்கம் 5முதல் 10 வருட காலங்களில் ஏற்படலாம் சரியான முறையில் சிகிச்சையளிக்காவிட்டால் கர்ப்பகால பகுதியில் நீரிழிவுநோய் பாதிப்பு அதிகரிக்கும். இதனால் கர்ப்பகால நீரிழிவு நோயின் போது கூடுதலான கவனம் செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.

ஆனால் முறையான சிகிச்சைகளை பெறும்போது மக்கள் நீண்ட காலம் வாழ முடியும். ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுகொள்ளவும் நீரிழிவு நோயினால் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் முகாமைத்துவத்தையும் அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வைத்தியசாலைகளுக்கு செல்வதால் எங்களுடைய நோய் குணமடைந்துவிட போவதில்லை. தனிப்பட்ட ரீதியில் பொறுப்புடையவர்களாக ஒவ்வொரு தனிநபரும் செயற்பட வேண்டும். அத்துடன் முறையான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தலும் உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29