கண்டி நகரத்திற்கு உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றலாத்துறையினரை கவர்ந்திழுக்கும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் ஆலோசனைப்படி ‘இரவுச் சந்தை’(நைட் பஸார்) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வார (24) இறுதியில் மூன்று தினங்களாக இது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் தயாரிப்புக்களான உணவுவகைகள், நுகர்வுப் பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள் உட்பட பல வகையான பொருட்களைக் கொண்ட விற்பனைத் தொகுதிகளும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேற்படி களியாட்ட நிகழ்வுகளைக் கண்டுகளிக்க பெருமளவு சுற்றுலாத்துறையினரும் உள்ளூர்வாசிகளும் கலந்துகொண்டனர்.

கண்டி நகரை விழித்திருக்கவைக்கும் மேற்படி செயற்பாட்டை கண்டி மாநகர சபை உட்பட மத்திய மாகாண சபையின் பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் இதனை ஒழுங்கு செய்திருந்தன.

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி மேயர் கேசர சேனாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வு அடிக்கடி கண்டியில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.