யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளவர்களிற்கு பொதுமன்னிப்பளிக்கவேண்டும் என கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக  அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அமைச்சரவை பத்திரத்தில் யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள படையினருக்கும் விடுதலைப்புலிகளிற்கும் பொதுமன்னிப்பளிக்கவேண்டும் என தான் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வேறு பலர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால் படையினர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுகளை சுமத்துவது பொருத்தமற்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்

படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகளையும் யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இரு தரப்பிலும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள்  மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பது தற்போது சாத்தியமற்ற விடயம் என்பதால் அரசாங்கம் பொதுமன்னிப்பை வழங்கி இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 2015 தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினோம் இதனை நாங்கள் செய்திருக்ககூடாது எனகுறிப்பிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க பிரிட்டன் இலங்கை குறித்த தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளது நாங்கள் தொடர்ந்தும் இந்த  பிரச்சினையை சர்வதேச கண்காணிப்பின் கீழ் வைத்திருக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.