ஆயிரம் கிலோவெடிகுண்டுகளை பயன்படுத்தி ஜம்முகாஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாமை இந்தியா அழித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் ஒன்றை இந்திய  போர் விமானங்கள் வெடி குண்டு வீசி அழித்தது. 

சுமார் ஆயிரம் கிலோவெடி குண்டுகளை இந்த முகாமை அழிக்க இந்திய ராணுவம் பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

பயங்கரவாத முகாம் அழிப்பு நடவடிக்கையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் -2000 ரக விமானங்கள் ஈடுபட்டன. 

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்துள்ளது.