அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசும் 2 ஆது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருக்கிறது.இதற்காக கிம் ஜாங் 24 ஆம் திகதி மாலை தென் கொரிய தலைநகர் பியோங்காங்கில் இருந்து தனக்கான சிறப்பு ரயிலில் வியட்நாமுக்கு பயணத்தை ஆரம்பித்தார்.

இரண்டரை நாட்கள் பயணம் செய்த கிம் ஜாங் உன், சீனா வழியாக இன்று வியட்நாம் வருகை தந்தார். 

கிம் குறித்த சந்திப்பு நடைபெறும் ஹனோய் நகருக்கு, கார் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். 

கிம் ஜாங் உன்னுடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உட்பட உயர் அதிகாரிகள் வியட்நாம் சென்றுள்ளனர்.

அதேபோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்நாம் புறப்பட்டுள்ளார். 

பயணத்திற்கு முன்னதாக, தனது டுவிட்டரில் பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், 

வடகொரிய ஜனாதிபதி ஆக்கப்பூர்வமான சந்திப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்து இருந்தார். 

ட்ரம்ப் கிம் ஜாங் உன் சந்தித்து பேசும் டோங் டாங், நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.