இன்றைய திகதியில் இளம் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் பணியிடங்களுக்கு செல்லும் போது தங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகமாக்கும் விடயமாக தங்களின் தோற்றத்தை அதிலும் குறிப்பாக முகத்தோற்றத்தை கருதுகிறார்கள்.
தங்களது தோற்றம் அழகானதாகவும் இளமையானதாகவும், பொலிவானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். முகத்தில் சுருக்கமும் கருவளையமும் இருக்கக்கூடாது என்று எண்ணுகிறார்கள். இதனை களைவதற்காகவே தற்பொழுது ஃபேசியல் cosmetology என்ற தனி பிரிவு அறிமுகமாகி இருக்கிறது.
இதன்மூலம் முகத்தில் காயத்தால் ஏற்பட்ட வடுக்களைச் சீராக்கலாம். வயதின் காரணமாக முகத்தில் எங்கேனும் சுருக்கங்களை அல்லது கோடுகளோ இருந்தால் அதனை சீர்படுத்தலாம். முகத்தில் அம்மை போன்ற பாதிப்புகளால் ஏற்பட்ட கருப்பு புள்ளிகளை முற்றிலுமாக நீக்கலாம். அதேபோல் பருக்கள் இருந்தாலும் அதனையும் அகற்றலாம். சிலருக்கு முகத்தில் மேடு பள்ளம் இருக்கலாம். அதனையும் இந்த துறையில் உள்ள நவீன சிகிச்சைகள் மூலம் சீராக்கலாம். ஒரு சில பெண்களுக்கு ஈறு மற்றும் உதடுகளில் கறைகள் இருக்கக்கூடும். அந்தக் கறைகளையும் நீக்கலாம்.
இவை அனைத்தையும் தற்பொழுது அறிமுகமாகியிருக்கும் மைக்ரோடெர்மாப்ரேஷன் (Micro Dermabrasion) என்ற சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். இத்தகைய சிகிச்சையின்போது தோலில் உள்ள பழைய செல் அணுக்கள் நீக்கப்பட்டு, புது செல் அணுக்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் தூண்டப்படுகிறது. இதனால் தோலில் எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல், முகத்தில் பொலிவு பராமரிக்கப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது.
இத்தகைய சிகிச்சைகளை அனுபவமிக்க வைத்திய நிபுணர்களிடம் மட்டுமே செய்து கொள்ளவேண்டும் என்று வைத்தியத் துறை பரிந்துரைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டொக்டர் தீப்தி.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM