சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்ட தொழிலாளர்களில் 175 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் டமாஸ்கஸ் அல்பாடியா என்ற இடத்தில் சிமெந்து தொழிற்சாலை ஒன்றுள்ளது. அங்கு திடீரெனப் புகுந்த ஐ.எஸ். அமைப்பினர் அங்கு பணியில் இருந்த 344 தொழிலாளர்களை கடத்திச் சென்றிருந்தனர்.

அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் 175 தொழிலாளர்களை ஐ.எஸ். அமைப்பினர் படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டமாஸ்கஸின் பெரும்பாலான பகுதிகள் ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்தன. தற்போது அவை இராணுவத்தினர் வசம் சென்று விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ். அமைப்பினர் தொழிலாளர்களை கடத்தி படுகொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.