தேசிய பல்கலைக்கழகங்களுக்கு வழமையாக அனுமதிக்ப்படும் மாணவர்களின் தொகையைவிடவும் கூடுதலாக 660 மாணவர்களை இவ்வருடம் அனுமதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது.

2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களில் 76,596 மாணவர்களிடமிருந்து இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 

அந்த விண்ணப்பங்களை பரிசீலனைசெய்து தெரிவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார்.

கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 177,907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பட்டத்தக்கது.