இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரான கெவின் பீட்டர்சன் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தீர்மாணித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வெளியேற்றப்பட்ட கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் எதிர்காலத்தில் தனது சொந்த நாடான தென் ஆப்ரிக்காவிற்காக விளையாட நினைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐசிசி விதிகளின் படி, ஒரு வீரர் ஒரு நாட்டிற்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி  நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே வேறு ஒரு அணியை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.

அதனடைப்படையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் பீட்டர்சன் சர்வதேச ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொண்டார்.இதுவே இவர் கலந்துக்கொண்ட கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.

தற்போது, 35 வயதான கெவின் பீட்டர்சன் தென் ஆப்ரிக்கா அணியிற்கு 2017 தகுதி பெறுவார்.எனினும், அவர் இன்னும் இங்கிலாந்து தேசத்துக்காக விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அழைப்பிற்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.