ஐ.பி.எல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரிஷத் பந்துக்கு மகேந்திர சிங் தோனி எச்சரிக்கை விடுப்பது போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனடு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில், ஐ.பி.எல் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டது. 

அதில், டெல்லி அணியின் வீரர் ரிஷத் பந்த், “தோனி எனது குரு. அவர் இல்லை என்றால் இப்படி ஆகியிருக்க மாட்டேன். ஆனால் இந்த முறை நான் சென்னை அணிக்கு எதிராக விளையாடும்போது கூல் கேப்டன் தோனி, கூலாக இருக்க முடியாது.  மஹி அண்ணா ரெடியா இருங்க என் ஆட்டத்த பார்க்க” என சாவால் விடுத்திருந்தார்.

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி பதிலளிப்பது போல், “அடிச்சு அண்டர்வேரோடு ஓடவிட்ருவேன். மானம் போன திரும்ப வராது” என பேட்ட படத்தில் ரஜினிகாந்த் கூறும் வசனத்தின் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளது.