"கோத்தாவை நிறுத்துவதில் எந்த ஆட்சேபனையுமில்லை"

By Vishnu

24 Feb, 2019 | 03:07 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என எண்ணுவது முட்டாள் தனமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமானால் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே அதற்கான பலத்தை பெற்றுக் கொள்ள முடியும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே வெற்றி இலக்கை அடைய முடியும். 

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right