ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமர வீரவின் அரசியல் வாழ்க்கையில் 30 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முக்கிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் சிறப்பு உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.