காந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 50 வயதான மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், 

ஆமை முட்டைகளை ஓரிடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்கு மாற்றும்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  இது தொடர்பான விசாரணைகளை காந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.