ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் மே தின பேரணி குறித்து மகிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளதாக குறித்த கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான மே தின பேரணிக்கு புறம்பாக மகிந்தராஜ பக்ஷவின் தரப்பினர் மாற்று பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிளவின்றி மே தின பேரணியை ஒருமித்து நடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.