சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையே இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிகொண்டுள்ள நிலையில், இவ் விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி நேற்று உத்தரகாண்டில் ஆர்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரத்துல்லா ஜஜாய், உஷ்மான் கானி அயர்லாந்து அணியினரின் பந்து வீச்சுக்களை துவம்சம் செய்தனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையானது விக்கெட் இழப்பின்றி மின்னல் வேகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து முதலாவது விக்கெட்டுக்காக 236 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். 

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில்  இது யாரும் பெற்றிறாத சிறப்பானதொரு இணைப்பாட்டமாகும். 

எனினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்பஉஸ்மான் கானி 48 பந்துகளில் 7 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களாக 73 ஒட்டத்துடன் ரான்கினின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, மறுமுணையில் இறுதிவரை ஓயாது அயர்லாந்து பந்துகளில் வான வேடிக்கை காட்டிய ஹஸ்ரத்துல்லா 62 பந்துகளில் 11 ஆறு ஓட்டம், 16 நான்கு ஓட்டம் அடங்களாக 162 ஓட்டங்களை குவித்தார்.

இது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் தனிநபர் பெற்ற இரணடாவது அதிகபடியான ஓட்டமாகும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 172 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். 

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை குவித்தது.

இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி 263 ஓட்டங்களை எடுத்திருந்தமையே இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகபடியான ஓட்டாமாக இருந்தது. இந் நிலையில் அயர்லாந்து அணி அந்த சாதனையை நேற்றைய தினம் முறியடித்துள்ளது.

279 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 84 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.