கஹவத்த, முல்லேகம, அம்பதென்ன, பொல்லேகொட, போகலவல, ஹராகடுவ, ஜம்புகஹபிட்டிய, தலவத்துகொட, அரம்பேபொல, கிரில்ல மற்றும் கசாவத்தை ஆகிய பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உட்பட்ட கஹவத்த நீர் பாய்ச்சும் நிலையத்தில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரையிலான 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.