3 அம்சக் கோரிக்கையை முன்வைத்து துவிச்சக்கரவண்டி சுற்றுப் பயணம் : இன்று 14 ஆவது நாள்

Published By: Digital Desk 4

23 Feb, 2019 | 07:38 PM
image

வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்,  லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் 

என்ற மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப்பயணத்தில் இன்று 14 வது நாளாக ஹட்டனை சென்றடைந்தார்.

கடந்த 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக இச்சாதனை துவிச்சக்கரவண்டி பயணத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

இவ் துவிச்சக்கரவண்டிப்பயணம் 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டமையவுள்ளதுடன் மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் நிறைவுற உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.

இவர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் இவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.

நேற்று யட்டியாந்தோட்டையை வந்தடைந்த இவர் இன்று ஹட்டனை சென்றடைந்த அவர் நாளை.  நுவரெலியாவை நோக்கி பயணிக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48