மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் தீர்ப்பளித்தார். 

நெல்லியடி பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த போது மது போதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு  பத்தாயிரம் ரூபாய்  அபராதம் விதித்து நீதவான்  தீர்ப்பளித்தார்.