பெங்களூர் நகரில் நடைபெற்றுவரும் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஏராளமான வாகங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

பெங்களூரு நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெலகங்கா விமானப்படை தளத்தில் ‘ஏரோ இந்தியா’ எனப்படும் இந்திய விமானங்கள் தொடர்பான 12ஆம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளையும், அங்குள்ள நவீனரக விமானங்களை பார்வையிடுவதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சிக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.