சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிகரெட்டுகளுடன்  வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யபட்ட நபரிடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான்.

கடந்த வியாழக்கிழமை நெல்லியடி நகர் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று நீதிமன்றில் முற்படுத்திய போது அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.