வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்  ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போரில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றார்.

மேலும் ட்ரம்ப் தெரிவிக்கையில்,

தற்போது வடகொரியாவுடன் சிறப்பான உறவு என்ற நிலையை எட்டியுள்ளோம். வடகொரியாவில் தற்போது, அணு ஆயுத சோதனை இல்லை. ஏவுகணை சோதனை நடைபெறவில்லை” என்றார். 

தென்கொரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அதுபோன்ற திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்றார். 

எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் -வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் இடையேயான இரண்டாவது சந்திப்பு வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.