கிளிநொச்சியில் நாளை மறுதினம் திங்கட்கிழமை (25).இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடபகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் நீண்ட போராட்டத்தினை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குவதுடன் கிளிநொச்சிப் போராட்டத்தில் வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். 

எனவே இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து போராட்டத்தில் வர்த்தகர்கள் கலந்துகொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.