பேராதெனிய - ரியகம பிரதேசத்தில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 03 வாகனங்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

 குறித்த விபத்தில் 06 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த சம்பவத்தில் காயமடைந்வர்களில் இருவருரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.