அடுத்த போகத்தில் இருந்து நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அரசி விலைக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அமைச்சர் பி. ஹெரிசன் இவ்வாறு கூறியுள்ளார்.