சுருட்­டுக்கு மூட்­டிய தீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீப்­பற்­றி­ய­தில் படு­கா­ய­ம­டைந்­த­தாக உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்டு வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்ட முதி­ய­வர் சிகிச்சை பய­னின்றி நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார்.

யாழ்ப்பாணம் கல்­லூரி வீதி பருத்­தித்­து­றை­யைச் சேர்ந்த  ­85 வயதுடைய முதி­ய­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.

கடந்த 9ஆம் திகதி தனது வீட்­டில் சுருட்டு புகைப்பதற்காக தீக்­குச்சி­ தவ­று­த­லாக அணிந்து இருந்த சாரத்­தின் மீது போட்டு உள்ளார்.அதனால் உடலில் பர­வ­லாக தீக்­கா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

அவர் மந்­திகை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். மேல­திக சிகிச்­சைக்­காக கடந்த 14ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் போதனா மருத்து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். சிகிச்சை பய­னின்றி அவர் நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார்.

இறப்­புத் தொடர்­பான விசா­ரணை யாழ்ப்­பாண போதான வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி  மேற்கொண்­டார்.