இரத்கம பிரதேசத்தில் காலி வீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் குறித்த வீதியிலான போக்குவரத்துக்கு முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே குறித்த  ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. 

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். 

இந்நிலையில் கடத்தப்பட்ட இருவரும் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.