யாழ்ப்­பா­ணம்,  பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகுதி­யில் 13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறுமி­யின் சித்தப்பா முறை­யி­லான 46 வய­து­டைய ஒரு­வர் பொலிஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

சிறு­மி­யின் தாய் இரண்­டாம் தார­மாக மணந்து கொண்ட நபரே (சித்தப்பா) இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

வயிற்­றுக்­குத்து என்று தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ம­னைக்கு ஒரு வாரத்­துக்கு முன்­னர் சிறுமி சிகிச்­சைக்­குச் சென்­றுள்­ளார். சிறுமி கர்ப்­ப­மாக இருப்­பதை மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளில் அறிந்து கொண்ட மருத்­து­வர்­கள் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ருக்­குத் தகவல் வழங்­கி­னர்.

காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸார் பருத்­தித்­து­றைப் பொலி­ஸா­ருக்கு விட­யத்­தைப் பாரப்­ப­டுத்­தி­னர்.

பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். சந்­தேக நப­ரான சித்­தப்­பாவை நேற்று மாலை கைது செய்­ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.