மலையகபகுதிகளில் தற்போது நிலவிவரும் கடும்வறட்சியுடனான காலநிலையின் காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகளவு குறைந்துள்ளதாக லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மவுசாகல நீர்தேக்கத்தின் நீர் மட்டமானது இன்று சுமார்  55 அடியால் குறைந்துள்ளதாகவும்,அதேபோல் காசல்ரி நீர் தேக்கத்தின் நீர் மட்டமானது இன்று 43 அடியால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் நீர்த்தேக்கங்களுக்கு நீரை தரும் கட்டாறுகளில் நீர் வரத்து அதிகளவு குறைந்துள்ளதால் இவ்வாறான நிலை தோன்றியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.