சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் தேவை கருதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட பஸ் சேவை தொடர்பிலான முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களை போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ் சேவைகளில் எவ்வித பிரச்சினைகள் காணப்படுமாயின்   1955, 011 1333 222 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தமது முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.